விளையாட்டில் ஆர்வம் இருந்தும் வாய்ப்பு இல்லையா? இதோ விளையாட்டு மையத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
விளையாட்டு மையத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
அம்மா இளைஞர் விளையாட்டு மையத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிராமங்களிலுள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தும் வகையில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு துறையில் மேம்படுவதற்காக இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி நிகழாண்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும், 2 பேரூராட்சிகளிலும் அம்மா இளைஞர் மேம்பாட்டு மையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு 15 முதல் 35 வயதிற்கு உள்பட்டவர்கள் தகுதியானவர்கள்.
இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் முதற்கட்டமாக நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது கிராமங்களிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Note: only a member of this blog may post a comment.