அரியலூர் கூட்டுறவு வங்கிகளில் எழுத்தர் பணி..! உங்கள் ஊர் அருகாமையிலும் உள்ள ஊர்களிலும் பணி உள்ளது...
அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரது கட்டுப்பாட்டில்செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமை உடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 17.07.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்
அ. வயது (01.01.2019) அன்று
1. விண்ணப்பத்தாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
(அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை
நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி
2. புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை
நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை
நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயிற்சி
பின்வரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து
விலக்களிக்கப்படுகிறார்கள்.
¨ வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை
வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
¨ பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
¨ எம்.காம் (கூட்டுறவு)
¨ எம்.ஏ (கூட்டுறவு)
¨ பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலைப் பட்டப்படிப்பு.
¨ பி.ஏ (கூட்டுறவு)
¨ பி.காம் (கூட்டுறவு)
பி.ஏ (கூட்டுறவு), பி.காம் (கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக்
கோருபவர்கள், கணக்கியல் , வங்கியியல் , கூட்டுறவு
, தணிக்கை ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை
முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பப்பதிவு மற்றும் எழுத்துத்தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவினையும் சார்ந்த மாற்றுத்
திறனாளிகள், அனைத்துப் பிரிவினையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு
இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்
திறனாளிகள் மாவட்ட மாற்றுதிறனாகளிகள் நல அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச்
சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் வருவாய் கோட்ட அலுவலர்
No comments:
Note: only a member of this blog may post a comment.