கல்வி தொலைக்காட்சியில் உங்கள் குழந்தைக்கான பாடநேரம் எப்போது தெரியுமா?
கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளி யிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மாணவர் களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக் காட்சி மூலம் பாடம் பயிற்றுவிக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத் தார். தற்போது அதற்குரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: கல்வி தொலைக் காட்சியில் 8, 9, 10-ம் வகுப்புகளுக் கான பாடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நிமிடம் வீதம் தினமும் 2.30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும்.
10-ம் வகுப்பு
காலை 8 முதல் 9 மணி வரை தமிழ், ஆங்கிலம் பாடங்களும்,
10 முதல் 11 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும்,
12 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் ஒளிபரப்பாகும்.
9-ம் வகுப்பு
காலை 9 முதல் 10 மணி வரை தமிழ், ஆங்கிலம் பாடங்களும்,
11 முதல் 12 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும்,
12.30 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் பயிற்றுவிக்கப்படும்.
8-ம் வகுப்பு பாடங்கள் மதியம் 1.30 முதல் 4 மணி வரையும்,
6-ம் வகுப்புக்கான பாடங்கள் மாலை 4 முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும், 2 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாலை 5 முதல் 7 மணி வரை 30 நிமிடம் மட்டும் பாடங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிக்கல்வியின் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 7-ம் வகுப்புக்குரிய விவரம் அட்டவணையில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 7-ம் வகுப்புக்குரிய விவரம் அட்டவணையில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Note: only a member of this blog may post a comment.