PMKISAN விவசாயிகள் ஊக்கத்தொகைக்கு புதியதாக பதிவு செய்யலாம்..

மத்திய அரசின் PMKISAN விவசாயிகள் ஊக்கத்தொகை வருடம் 6000 ரூபாய் திட்டத்திற்கு புதியதாக பதிவு செய்யலாம்..
 

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை 2019 பிப்ரவரி முதல் நாள் இந்தியாவின் இடைக்கால இடைக்கால நிதியறிக்கையின் போது பியுஷ் கோயல் அறிவித்தார்.

ஏற்கனவே விவசாயிகள் நிதி பெற்று வரும் நிலையில், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் புதியதாக பதிவு செய்ய இப்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் துவங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையானவை :

ஆதார் அட்டை,
ரேஷன் அட்டை,
சிட்டா,
பாஸ்புக்,
ஆதாரில் இணைத்த செல் எண்

கவனிக்க வேண்டியவை:

* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே தகுதியானவர்.
* நிலம் தம் பெயரில் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய இயலும்.
* ஆதாரில் மொபைல் எண் இணைத்திருத்தல் அவசியம்.
* இத்திட்டத்தில் ஏற்கனவே இணைந்து பணம் வராமல் இருந்திருந்தால் புதியதாக விண்ணப்பிக்க இயலாது.

No comments:

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.